கம்பஹாவில் ஏற்பட்ட வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் பரிதாபமான உயிரிழந்துள்ளார்.
மல்வானை பிரதேசத்தை சேர்ந்த 36 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.வல்கம உலஹிட்டிவல – முகலான வீதியில் நேற்று காலை இடம்பெற்ற வாகனம் விபத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த வீதியில் பயணித்த வேன் ஒன்று இரண்டு பேர் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், இன்னொருவர் படுகாயமடைந்த நிலையில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் வெளிநாடு ஒன்றிலிருந்து நாடு திரும்பியவர் என தெரிய வந்துள்ளது.தனது சகோதரரின் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் இலங்கை வந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பில், வேன் சாரதியை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.