பூமியை தாக்க வரும் பென்னு விண்கல்.! துவங்கிவிட்டதா பூமியின் இறுதி நாட்கள்?.!!

இந்த உலகை தாண்டியுள்ள அண்ட வெளியில் இருக்கும் கோடிக்கணக்கான விண்கற்களில் பென்னு என்ற விண்கற்களும் உள்ளது. இந்த பென்னு விண்கல்லானது பூமியை நோக்கி பம்பரம் போல சுழன்று கொண்டு வந்ததை கடந்த 1999 ம் வருடத்தில் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

இந்த பென்னு விண்கல்லை ஆராய்ச்சி செய்வதற்காக கடந்த 2016 ம் வருடத்தில் ஓரிசிஸ் ரெக்ஸ் நின்ற விண்கலத்தை நாசா அனுப்பி., அதன் மூலமாக இரண்டு வருடங்களின் பயணத்திற்கு பின்னதாக கடந்த வருடத்தின் டிசம்பர் மாதத்தில் பென்னு விண்கல்லில் சுற்றுவட்ட பாதையை அடைந்தது.

பென்னு விண்கல்லில் நீர் மூலக்கூறுகள் இருக்கிறது என்று ஏற்கனவே ஓரிசிஸ் விண்கலம் உறுதி செய்ய நிலையில்., தற்போது விண்கல்லிற்கு அருகில் சென்று புகைப்படங்களை எடுத்துள்ளது.

பென்னு விண்கல்லில் இருக்கும் சுமார் 2 அவுன்ஸ் (0 .566 கிராம்) எடையளவுள்ள மாதிரி எடுக்கப்பட்டு., பூமியை நோக்கி பயணம் செய்யவுள்ளது. அந்த வகையில் ஓரிசிஸ் விண்கலமானது வரும் 2023 ம் வருடத்தில் பூமிக்கு மீண்டும் திரும்பும் என்று கூறப்படுகிறது.

மேலும்., தற்போது கிடைத்துள்ள புகைப்படம் மற்றும் அடுத்தபடியாக கிடைக்கப்போகும் மாதிரியானது ஆராய்ச்சியில் பெரும் திருப்பு முனையாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.