முன்னைய காலத்தில் இடம்பெற்றவை போன்று திறந்த குதிரை வண்டிலில் மணமக்களை ஏற்றி பவனி வந்த திருமண நிகழ்வு யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இடம்பெற்றது.
மணமக்கள் குதிரை வண்டிலில் பவனி வந்ததை சிறுவர்கள் வேடிக்கையாக பார்வையிட்டனர்.மணமகன் காலையில் சாவகச்சேரி கல்லடி மூட்டில் உள்ள வீட்டிலிருந்து குதிரை வண்டிலில் சாவகச்சேரி டச் வீதியில் உள்ள திருமண மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
பின்னர் திருமணம் முடிவடைந்ததும், குதிரை வண்டிலில் மணமக்கள் பவனியாக அழைத்துச் செல்லப்பட்டனர்.