தந்தை, சகோதரன், பாதிரியார்கள் என… கன்னியாஸ்திரிக்கு நடந்த கொடுமை….

அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர், தனக்கு சிறுவயதிலிருந்து தந்தை மற்றும் பாதிரியர்களால் பாலியல் துன்புறுத்தல் நடந்ததாக புத்தகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த மார்கரெட் ஹார்ட் (68) என்பவர் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவம் குறித்து Blood on the Rosary என்னும் புத்தகத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார்.

மார்கரெட் தன்னுடைய சகோதரன் மைக்கேலுடன் இரட்டை பிறவியாக பிறந்தவர். இருவரும் சிறுவயதிலிருந்தே ஒன்றாகவே பள்ளியில் அமர்ந்து படித்து வந்துள்ளனர்.

மார்கரெட்ற்கு இரண்டு வயது நடக்க ஆரம்பித்ததிலிருந்தே அவருடைய தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார். அந்த கொடுமை அவருடைய 20 வயது வரை தொடர்ந்ததால், அதிலிருந்து தப்பிக்க முடிவுவெடுத்து கன்னியாஸ்திரியாக மாறினார்.

அதேசமயம் அவருடைய சகோதரன் மைக்கேல், சலெசியன் திருச்சபையில் சேர்ந்து பாதிரியாருக்கு படிக்க ஆரம்பித்தான்.

கன்னியாஸ்திரியாக மாறிய பிறகும் கூட, மார்கரேட்டிற்கு அங்கும் இரண்டு பாதிரியார்களால் பாலியல் கொடுமை நடத்தப்பட்டுள்ளது. இதிலிருந்து தப்பிக்க அவர், கான்வென்ட்டை விட்டு வெளியேறினார்.

இதற்கிடையில் அவருடைய தந்தை வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்துவிட்டார். விடுமுறை கிடைக்கும் நேரமெல்லாம் வீட்டிற்கு வரும் மைக்கேல் உடன், ஒருமுறை உறவினர் வீட்டிற்கு மார்கரெட் சென்றுள்ளார்.

அங்கு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை அருகில் அழைத்து மைக்கேல் மடியில் வைத்திருந்துள்ளான். அப்பொழுது அவனுடைய கை, குழந்தையின் அந்தரங்க உறுப்புகளில் பட்டது.

இதனை பார்த்ததும் மார்கரெட் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். அதுவரை சகோதரன் மேல் வைத்திருந்த நம்பிக்கை, தூள்தூளாய் போனது. சிறுவயதில் தந்தை எப்படி மார்கரெட்டிடம் நடந்துகொண்டாரோ அதுபோலவே, சகோதரன் நடந்துகொள்வதை கவனித்துள்ளார்.

அடுத்த சில நாட்களில், கல்லூரியில் படித்த மனைவி ஒருவரை, மைக்கேல் துஸ்பிரயோகம் செய்துவிட்டதை கேள்விப்பட்ட மார்கரெட் உடனடியாக தலைமை பாதிரியர்களிடம் முறையிட்டுள்ளார்.

பின்னர் அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் பொலிஸார், விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு விசாரணையை கேட்டறிந்த நீதிபதி 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். ஆனால் 9 மாதங்கள் மட்டுமே சிறைத்தண்டனை அனுபவித்து வெளியில் வந்தார்.

அதன்பிறகு 2016ம் ஆண்டு மேலும் 3 சிறுமிகளிடம் அத்துமீறியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தன்னுடைய சகோதரனை நினைத்து பெரிதும் வருந்தி வரும் மார்கரெட், கான்வென்ட்டை வெளியில் வந்ததும் ராட் என்பவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது சமுக சேவகராக பணிபுரிந்து வரும் மார்கரெட், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிராக நடைபெறும் பாலியல் வன்முறைகள் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகிறார் என அந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.