பிரித்தானிய இளவரசர் வில்லியம், கேட் மிடில்டனை சந்திப்பதற்கு முன்பே ஒரு பெண்ணிடம் உணர்ச்சிகரமான காதலில் விழுந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் ஆகியோர் 2001 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் சந்தித்ததில் இருந்து 18 ஆண்டுகளாக ஒன்றாகவே இருந்து வருகின்றனர்.
ஆனால் அந்த ஆண்டின் கோடை காலத்தில், இளவரசர் வில்லியம் வேறொருவரோடு ஒரு ‘உணர்ச்சி காதல்’ கொண்டிருந்ததாக அரச எழுத்தாளர் கேட்டி நிக்கோல், 2010-ம் ஆண்டு தான் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சேர்பெஸ்ஸ்டர் பார்க் போலோக் கழகத்தை நிர்வகித்த மேஜர் நிக்கோலஸ் மஸ்கிரேவின் 18 வயது மகள் அரபேல்லா.
இவரும் இளவரசர் வில்லியமும் சிறு வயது முதலே நன்கு அறிந்த நண்பர்களாகவும், நெருங்கிய நண்பர்களாவும் இருந்து வந்தனர்.
ஒருமுறை Highgrove பகுதியில் உள்ள நண்பர் வீட்டில் நடைபெற்ற விருந்திற்கு ஹரி மற்றும் வில்லியம் தன்னுடைய நண்பர்களுடன் கலந்துகொண்டனர். அங்கு அரபேல்லாவை வில்லியம் மீண்டும் சந்தித்தார். அரபேல்லா அழகிய இளம்பெண்ணாக ஜொலித்தாள்.
அவளுடன் சேர்ந்து மது குடித்துவிட்டு, இளவரசர் வில்லியம் நடனமாடினார். பின்னர் இரவு நேரம் ஆகியதும், இரவு வணக்கம் கூறிவிட்டு அரபேல்லா மாடிக்கு புறப்பட்டார். உடனே இளவரசரும் அமைதியாக அறையை விட்டு வெளியேறினார்.
அப்போது தான் இருவருக்குள்ளும் உணர்ச்சிகரமான காதல் மலர்ந்தது. அந்த கோடைகாலத்தில் இருவரும் நேரம் செலவழித்ததாக கேட்டி குறிப்பிட்டுள்ளார்.
இளவரசர் வில்லியம் செண்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக் கழகத்தில் செப்டம்பர் மாதம் தனது படிப்பைத் தொடங்கும்போது, அரபல்லாவிற்கு நெருக்கமாக இருக்க வேண்டும் என்ற தனது திட்டத்தை விட்டு வெளியேறினார்.
படிப்பிற்கான முதல் வாரத்தில் கேட் மிடில்டனை இளவரசர் சந்தித்த பின் அரபல்லா உடனான காதலில் இருந்து வெளியேற ஊக்குவித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இளவரசரால் அரபல்லா உடன் காதலை தொடர முடியவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் 2011 ல் வெஸ்ட்மின்ஸ்டர் அபேவில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இளவரசர் ஜார்ஜ் (5), இளவரசி சார்லோட் (3) மற்றும் பிரின்ஸ் லூயிஸ், (ஒன்பது மாதங்கள்) என மூன்று குழந்தைகள் உள்ளனர்
அரபல்லா முஸ்கரே, 2014 ஆம் ஆண்டில் முதலீட்டு வங்கியாளரான ஜார்ஜ் கேல்லியர்-ப்ராட்ஸை என்பவரை மணந்தார்.