இங்கிலாந்து சாலையில் சிறுமியை துஸ்பிரயோகம் செய்ய முயன்ற நபரிடம் இருந்து, பத்திரமாக காப்பாற்றிய பொதுமக்களுக்கு பொலிஸார் தங்களுடைய நன்றியினை தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்தின் ஆஷ்டன் நகர பகுதியில் உள்ள பூங்கா அருகே, 17 வயது சிறுமியை தாக்கி 23 வயதுள்ள இளைஞர் துஸ்பிரயோகம் செய்ய முயன்றுள்ளார்.
அங்கிருந்த ஒரு குழுவை சேர்ந்த சிலர், இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்து இளைஞரிடம் இருந்து சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட ஆரம்பித்தனர்.
இதற்கிடையில் சம்பவம் அறிந்து வந்த பொலிஸார், அந்த குழுவின் உதவியுடன் தப்ப முயன்ற இளைஞரை விரட்டி பிடித்து கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் கார்ல் வார்ட், இந்த பயங்கரமான தாக்குதலில் பாதிக்கப்பட்ட சிறுமி மீது தான் தற்போது எங்களுடைய முழுக்கவனமும் உள்ளது. அதிலிருந்து மீண்டு வர சிறுமிக்கு சிறப்பு ஆதரவு அளிக்கப்பட்டு வருகிறது.
அதேசமயம் பொலிஸாருடன் ஒத்துழைத்து, பயங்கரமான சம்பத்தை தடுத்து நிறுத்திய அந்த குழுவினருக்கும் எங்களுடைய பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
பொலிஸ் மற்றும் பொதுமக்கள் குற்றவாளிகளைத் தடுக்க ஒன்றாக வேலை செய்வதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும் என தெரிவித்துள்ளார்.