அவனுடன் ஒடிப்போன எனது மனைவியை மீட்டுத்தாருங்கள்!

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவை சந்தித்து தனது மனைவியை மீட்டுத்தருமாறு கணவர் பாலசுப்பிரமணியன் கண்ணீருடன் கோரிக்கை மனு அளித்துள்ளதால் போராட்டம் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக இருக்கும் கருப்பசாமி என்பவருக்கும் 3 பிள்ளைகளின் தாய் ராமலட்சுமிக்கும் காதல் மலர்ந்துள்ளது.

தனது மகள்களிடம் உதவி ஆய்வாளர் கருப்பசாமி உறவுக்காரர் என்றும், உங்களுக்கு பெரியப்பா முறை என்றும் அறிமுகம் செய்துள்ளார். அதை 3 பெண் குழந்தைகளும் நம்பி இருக்கின்றனர்.

ராமலட்சுமியின் கணவர் பாலசுப்பிரமணியன் தினக்கூலிப் பணிக்கு கேரளாவுக்கு சென்றுவிடுவார் என்பதால் கருப்பசாமியுடன் சேர்ந்து ராமலட்சுமி ஊர் சுற்றியுள்ளார்.

இதற்கிடையே, உதவி ஆய்வாளரின் மனைவி உடல் நலக்குறைவால் காலமானார். இதனால், இவர்களது நெருக்கம் அதிகமாகிவிட்டது. அரசல் புரசலாக கள்ளக் காதல் விவகாரம் ஊருக்குள் தெரியவர 3 மாதங்களுக்கு முன்னர் ஓடிப்போயுள்ளனர்.

தனது மனைவியை மீட்டுத்தரும்படி பொலிசில் பாலசுப்பிரமணியம் புகார் கொடுத்ததையடுத்து, நான் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. என் மீது கணவர் சந்தேகப்பட்டதால், என் அம்மா வீட்டில் கேரளா மாநிலம் மூணாறில் தங்கி இருக்கிறேன்” என்று சொல்லிவிட்டு பொலிஸ் கருப்பசாமியுடன் சென்றுவிட்டார்.

இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவை சந்தித்து தனது மனைவியை மீட்டுத்தருமாறு கணவர் பாலசுப்பிரமணியன் கண்ணீருடன் கோரிக்கை மனு அளித்துள்ளார்.