மனிதனாக பிறந்த அனைவருக்கும் உள்ள ஒரு நோய் தான் ஞாபக மறதி.
மறதி (Amnesia) என்பது ஒரு வகையான நினைவுகளை இழக்கும் நிலை என்று கூறப்படுகின்றது.
மறதி என்பது ஒரு நோய் அல்ல. இதற்கு பல காரணங்கள் உள்ளன. இதற்காக மருத்துவரிடம் சென்று தான் மருந்துகள் எடுக்க வேண்டும் என்பது அவசியமில்லை.
நாம் வேண்டாம் என தூக்கி ஏறியும் கறிவேப்பிலை மட்டுமே போதும். இது ஞாபக மறதியை அடியோடு விரட்டுகின்றது.
தற்போது உங்க ஞாபக மறதியையும் குணப்படுத்தலாம் என்பதை பார்போம்.
தேவையானவை
- கறிவேப்பிலை – ஒரு கப்
- தண்ணீர் – 2 கப்
- சீரகம் – சிறிதளவு
- வெல்லம் – சிறிதளவு
- கருப்பு உப்பு – சிறிதளவு
செய்முறை
முதலில் சீரகத்தை வறுத்து அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கறிவேப்பிலையை போட்டு அதில் இரண்டு கப் தண்ணீரை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.
பின் நன்றாக கொதித்தவுடன் அதில் வெல்லம் சேர்க்கவும்.
ஐந்த நிமிடம் கழித்து அதனை இறக்கிவிடலாம். அதில் சிறிதளவு கறுப்பு உப்பு மற்றும் சீரகத் தூளை கலந்து குடிக்கலாம்.
இந்த டீயை குடிப்பதனால் நம் ஞாபக சக்தி அதிகரிக்கும் என்று சொல்லப்படுகின்றது.