எனது தவறான புகைப்படங்கள் வெளியானதால் தற்கொலைக்கு முயன்றேன்!

80களில் கனவுக்கன்னியாக வலம் வந்த நடிகை ஜெயப்பிரதா அதன்பின்னர் அரசியலில் இணைந்து செயல்பட்டு வந்தவர் கடந்த சில வருடங்களாக அரசியலில் ஈடுபாடு இல்லாமல் இருக்கிறார்.

சமாஜ்வாடி கட்சியில் இவர் இருந்தபோது, அக்கட்சியின் பொதுச்செயலாளர் அமர்சிங்குடன் இணைத்து பேசப்பட்டார்.

இந்நிலையில் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கும் இவர் சமீபத்தில் மும்பை ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில், தான் தற்கொலை செய்துகொள்ளும் முடிவை எடுத்ததாக கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, என்னுடைய மார்பிங் புகைப்படங்கள் வெளியானபோது நான் மிகவும் வேதனையில் இருந்தேன். அப்போது அமர்சிங் டயாலிஸ் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார்.

வாழ்வதற்கே பிடிக்காமல் தற்கொலை செய்துகொள்ளும் முடிவை எடுத்தேன், அப்போது எனக்கு ஆதரவா அமர்சிங் மட்டுமே இருந்தார்.

நான் வெளியில் செல்கிறேன், ஆனால் உயிரோடு வீடு திரும்புவது சந்தேகம் என தாயிடம் கூறிசெல்வேன், தற்போது அதிலிருந்து மீண்டுவந்துவிட்டேன் என கூறியுள்ளார்.