இங்கிலாந்து அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி பெற்ற நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி ஆன்டகுவாவில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 187 ரன்களில் ஆட்டமிழந்தது.
தனது முதல் இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாம் நாள் ஆட்ட ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்திருந்தது. இன்று ஆட்டத்தை தொடங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு ஆட்டம் தொடங்கும் முன்னரே பேரதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான அன்சாரி ஜோசபின் தாயார் இன்று காலை இயற்கை எய்தினார்.
அவர் தாயாரின் இறுதிச்சடங்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆட்டத்தை தொடர்வதை உறுதி செய்தார். அவர் அணியினருடன் இணைந்து கொண்டார். இன்று வேகமாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட்டுகள் விழ களமிறங்கிய அல்சாரி ஜோசப் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 306 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து அணியை விட 119 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. தற்போது இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சை ஆடி வருகிறது.