இத்தாலி நாட்டில் இருந்து துபாயை நோக்கி விமானம் ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்த விமானத்தில் பணிப்பெண்ணாக பணியாற்றும் விக்டோரியா என்னும் பெண்ணை அவரது நெருங்கிய தோழரான ஸ்டிபானோ காதலித்து வந்துள்ளார்.
தனது எதிர்கால வாழ்க்கை துணையிடம் எவ்வாறு தெரிவிப்பது என்று நினைத்து கொண்டு இருந்த நேரத்தில்., வித்தியாசமான முறையில் தனது காதலை வெளிப்படுத்த திட்டமிட்டுள்ளார்.
அந்த வகையில் விமானத்திற்குள் பயணம் செய்ய தயாரான ஸ்டிபானோ அங்குள்ள பயணிகளிடம் தான் விமான பணிப்பெண்ணை காதலிப்பதாகவும்., அவரிடம் காதலை கூற இந்த முறையை தேர்வு செய்துள்ளதாகவும்., உதவி புரியுமாறும் தெரிவித்துளளார்.
இதனை கேட்ட பயணிகள் உதவி செய்ய முன்வரவே., விமானத்தின் இவர்கள் இருந்த பிரிவிற்கு வருகை தந்த விக்டோரியாவை ஆரவாரத்துடன் வரவேற்பை கண்டு ஒரு கணம் அதிர்ச்சியடைந்த அவர்., ஸ்டிபானோ இருந்த பகுதிக்கு சென்றார்.
அங்கு தனது தோழரை கட்டியணைத்து தனது காதலை முழங்காலிட்டு தெரிவிக்கவே., ஒரு கணம் செய்வதறியாது திகைக்கவே பின்னர் அவரது காதலை ஏற்றுக்கொண்டார்.
தரையில் இருந்து சுமார் 35 ஆயிரம் அடி உயரத்தில் விமான பறந்துகொண்டு இருக்கும் நேரத்தில் தனது காதலை வெளிப்படுத்திய நிகழ்ச்சியை கண்கலங்கியவாரே ஏற்று கொண்டதை அந்த விமான நிறுவனமானது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.