அமைதியாக காய் நகர்த்திய அதிமுக தலைமை.! விரைவில் வெளியாகப்போகும் அறிவிப்பு.!!

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது., மறைந்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்ற கழகமானது 40 தொகுதிகளில் போட்டியிட்டு 37 தொகுதிகளை கைப்பற்றியது. பாரதிய ஜனதா கட்சி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்ற நிலையில்., திராவிட முன்னேற்ற கழகமானது ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

இந்நிலையில்., ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னதாக அண்ணா திராவிட முன்னேற்ற கழகமானது புதிய தலைமையில் வரும் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள விருக்கிறது., அதே போன்று திராவிட முன்னேற்ற கழக்கத்தின் தலைவர் கருணாநிதி மறைவிற்கு பின்னர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ளது.

இதன் மூலமாக இரண்டு கட்சிகளும் தங்களின் பலத்தை நிரூபணம் செய்வதற்காகவும்., வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்க்காகவும் பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. திராவிட முன்னேற்ற கழகத்தை பொறுத்த வரையில்., தனது கூட்டணி கட்சிகளுடன் தேர்தலை எதிர்கொள்வதற்கு பேச்சுவார்த்தையும்., தேர்தல் அறிக்கை செய்ய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

அதே போன்று அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும்., தேர்தல் அறிக்கை தயார் செய்வதற்கும் ஏற்கனவே குழுவானது அமைக்கப்பட்டது. இருந்தாலும்., தற்போது வரை அதிமுக கட்சியில் கூட்டணி கட்சிகள் உள்ளனவா? என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகாத நிலையில்., பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா மற்றும் பா.ஜ.க கட்சிகளுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் தெரிகிறது.

இந்நிலையில்., தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட இருக்கும் 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக போட்டியிட விருப்பம் உள்ள தொண்டர்கள் இன்று முதல் மனுக்களை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் வழங்கலாம் என்றும்., இந்த விருப்ப மனுக்களானது காலை சுமார் 10 மணிமுதல் மாலை 5 மணி வரி பெறப்படும் என்றும்., ரூ.25 ஆயிரம் விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.