திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள பெண்கள் சிறையில் கடலூர் ஒன்றியம் பெரிய காட்டு பாளையம் காவல் நிலையத்திற்க்கு கட்டுப்பாட்டிலுள்ள பெண் காவலர் செந்தமிழ் திருச்சி பெண்கள் சிறையில் பணிபுரிந்து வந்துள்ளார்.
கடலூர் மாவட்டம் பெரியகாட்டுப்பாளையம் அடுத்துள்ள தவளைக்குப்பத்தை சேர்ந்த செல்லப்பன் எனபவரின் மகள் செந்தமிழ்செல்வி(24). இவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், பெண் காவலர் செந்தமிழ்ச்செல்வியின் உடல் திருச்சி அமரர் அறையில் உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
தமிழ்செல்வியின் பணிக்கு ‘ஷிப்டு’முறை பணி என்பதால், நேற்று மாலை 6 மணி வரையிலும் செந்தமிழ்செல்வி, பணிக்கு வரவில்லை. இதனால் சக ஊழியர்கள் தமிழ்செல்வியை தொலைபேசியில் தொடர்பு கொண்டனர் ஆனால் அவரது போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து சக ஊழியர்கள் அவரது வீட்டுக்கு நேற்று இரவு 8 மணியளவில் வந்து பார்த்தனர். அப்போது வீடு உள்பக்கமாக தாளிடப்பட்டிருந்தது. நீண்ட நேரமாகக் கதவைத் தட்டியும் திறக்கப்படாததால், சந்தேகமடைந்த சிறைக்காவலர்கள், கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது, செந்தமிழ்செல்வி துப்பட்டாவால் தூக்குப்போட்ட நிலையில் தொங்கியுள்ளார். மரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.