பார்சலில் வந்த கடிதத்தில் இருந்த வார்த்தை., காவல் நிலையத்தில் கதறல்.!!

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் சென்று சுவாமியை தரிசனம் செய்யலாம் என்று நீதிமன்றம் தனது உத்தரவை பிறப்பித்தது. இதனையடுத்து சபரிமலைக்கு விரதம் இருந்து வந்துள்ளதாகவும்., ஐயப்பனை தரிசனம் செய்யாமல் செல்லமாட்டோம் என்று பெண்ணியவாதிகளாக கூறி பலர் சர்ச்சைகளை ஏற்படுத்த துவங்கினர்.

இதனையடுத்து சபரிமலை வன்முறை பூமியாக மாறி., கலவரங்கள் வெடிக்க துவங்கியது. இதனை தொடர்ந்து பல போராட்டங்கள் நடந்து வந்த சமயத்திலேயே., காவல் துறையினரின் ஆதரவுடன்., கேரளாவில் இருக்கும் கல்லூரி பேராசிரியை மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகர் பிந்து (42) மற்றும் கனதுர்கா (44) என்பவர்கள் ஐயப்பனை தரிசனம் செய்து வந்தனர்.

ஏற்கனவே போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில்., “எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றினார் போலவே” போராட்டம் தீவிரமாக நடைபெற்றது. இந்த சம்பவம் நடந்து சுமார் ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில்., இவர்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி காவல் துறையினர் பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்து வந்த நிலையில்., தற்போது இவர்களுக்கு கொலை மிரட்டலானது விடுக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு வந்த கடிதத்தில்., சுவாமி ஐயப்பனின் கோவிலுக்குள் நுழைந்த குற்றத்துக்காக இருவரும் கண்டிப்பாக தண்டிக்கப்படுவீர்கள்” என்று இருந்துள்ளது. இதனை கவனித்த அவர்கள் காவல் துறையினரிடம் கூறவே இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.