ஆந்திராவில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஆந்திர பிரதேச மாநிலம் பிரகாசம் மாவட்டம் நகுலவரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன்மோகன் ரெட்டி. இவர் கடந்த 12 வருடத்திற்கு முன்னதாக ரஜினி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
அதேபகுதியில் ஸ்ரீ வெங்கடரமண மல்டிஸ்பெஸ்டிட்டி மருத்துவமனையை நடத்தி வந்த மருத்துவர் வெங்கட நாராயணா, தன்னுடன் படித்தவர் என ரஜினி தன்னுடைய கணவருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
இதற்கிடையில் ரஜினிக்கும், வெங்கட நாராயணாவிற்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது, இதனை தெரிந்துகொண்ட ஜெகன்மோகன், ரஜினியை கண்டித்துள்ளார்.
இதனால் கணவனை தீர்த்து கட்ட முடிவு செய்த ரஜினி, வெங்கட நாராயணாவிடம் தெரியப்படுத்தியுள்ளார். அவர் தனக்கு தெரிந்த பொலிஸ் ஒருவரிடம் ரூ.15 லட்சம் கொடுத்து, ரவுடிகளை ஏற்பாடு செய்துள்ளார்.
அதன்படி செவ்வாய்க்கிழமை இரவு, ஜெகன்மோகனின் வீட்டிற்கு சென்ற பொலிஸார், தன்னுடைய அடையாள அட்டையை காண்பித்து விசாரணை ஒன்று இருப்பதாக கூறி அழைத்து சென்றுள்ளார். காரில் ஏறிய அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் ஊசி ஒன்றினை போட்டு மருத்துவர் கொலை செய்துள்ளார்.
பின்னர் கூலிப்படையினரின் உதவியுடன் சடலத்தை வனப்பகுதியில் தூக்கி இருந்துள்ளனர்.
இதற்கிடையில் ரஜினி, தன்னுடைய கணவரை காணவில்லை என பொலிசாரிடம் புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில் சடலத்தை கண்டுபிடித்த பொலிஸார், ரஜினிக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ரஜினி, சடலத்தை பார்த்ததும் லேசாக சிரித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த பொலிஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
அதன்பிறகு வெங்கட நாராயணாவை கைது செய்து விசாரித்ததில், மருத்துவமனைக்கு வரும் பல பெண்களுடன் அவர் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது. இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.