பணத்துக்காக 56 வயது நபருடன் 16 வயது சிறுமிக்கு திருமணம் நடந்த நிலையில் சிறுமி சமூக ஆர்வலர்களால் தற்போது மீட்கப்பட்டுள்ளார்.
நைஜீரியாவை சேர்ந்தவர் லிகிலோ (56). மிக பெரிய கோடீஸ்வர குடும்பத்தை சேர்ந்த இவருக்கும் 16 வயதான ஏழை குடும்பத்தை சேர்ந்த சிறுமிக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.
லிகோலோவின் சொத்துக்கு ஆசைப்பட்டு அவருக்கு சிறுமியை திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இதன்மூலம் சிறுமி அந்த குடும்பத்துக்கே பாலியல் அடிமையாக மாற்றப்படுவார் என சிலர் எச்சரிக்கை செய்தனர்.
இந்த சம்பவத்தில் தற்போது திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
அதாவது சிறுமியை மணந்த முதியவர் லிகிலோ மனநிலை சரியில்லாதவர் என தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் சனிக்கிழமை இரவு குறித்த சிறுமியை அவர்களும், சமூக ஆர்வலர்களும் மீட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து லிகிலோ குடும்பத்தார் மற்றும் சிறுமியின் குடும்பத்தார் எதுவும் பேசாத நிலையில் அவர்களிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.