படுக்கையறை இந்த திசையில் இருந்தால் நல்லதாம்??

ஒரு வீட்டை காட்டுவதற்கு முன் வாஸ்து பார்ப்பது மிகவும் முக்கியமானதாகும். இது காலங்காலமாக பின்பற்றி வந்த ஒரு சாஸ்திரமாகும்.

பொதுவாக வாஸ்து படி ஒரு வீட்டில் அனைத்து அறைகளும் அமையப்பெற்றாலே அந்த வீட்டில் நேர்மறை சக்தி அதிக அளவில் இருக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

அந்தவகையில் நமது வீட்டில் படுக்கை அறையினை எப்படி அமைத்து கொண்டால் என்ன நன்மைகள் ஏற்படும் என பார்ப்போம்.

  • வடமேற்கு திசையில் இருக்கும் படுக்கை அறைகளில் வடமேற்கு, வயதை அடைந்தும் திருமணம் காலதாமதமாகும் பெண்கள் படுத்து உறங்கலாம்.
  • ஒரு வீட்டில் கணவன்-மனைவி படுத்து உறங்கும் அறையை, வீட்டின் தென்மேற்குப் பகுதியில் மட்டுமே அமைப்பது நல்லது.
  • வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் தம்பதிகள் உறங்கும் படுக்கையறை கட்டாயம் அமைக்கக் கூடாது.
  • வீட்டின் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வடகிழக்குப் பகுதியில் படுக்கையறை அமைத்து பயன்படுத்துவது நல்லது.
  • படுக்கையறையில் கட்டில் மற்றும் மெத்தை, படுக்கையைத் தென்மேற்கு மூலையில் போட்டு படுக்கும் வகையில் அமைத்து கொள்ள வேண்டும்.
  • ஸ்லாப் எனப்படும் உத்திரங்கள் கீழாக கட்டில், மெத்தை அமைத்து அதில் உறங்க கூடாது.
  • பலரும் படுக்கையறையுடன் இணைந்த குளியலறை, கழிவறை போன்றவற்றை அமைக்கின்றனர். இப்படி குளியல், கழிவறை கட்ட விரும்பும் நபர்கள் படுக்கை அறையின் வடமேற்கு மூலையில் தான் கழிவறை அமைக்க வேண்டும்.
  • எந்த இடத்தில் படுக்கை அறை இருந்தாலும், படுத்து உறங்கும் போது வடக்கு திசையில் கட்டாயம் தலை வைத்து உறங்கக் கூடாது.