யாழில் கொட்டும் மழைக்கு மத்தியில் இடம்பெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டம்….!

முப்படைகள், பொலிஸ் அணிவகுப்புடன் யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் முன்பாக கொட்டும் மழைக்கு மத்தியிலும் சுதந்திர தினக் கொண்டாட்டம் இன்று காலை நடைபெற்றது.

மாவட்டச் செயலர் நா.வேதநாயகன் தேசிய கொடியை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.அதனைத் தொடர்ந்து இராணுவம்,  கடற்படை, விமான படையினரின் அணி வகுப்புடன், பாடசாலை மாணவர்களின் அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்வுகள் இடம்பெற்றன.

நிகழ்வில் மத தலைவர்கள்,  முப்படைகளின் பிரதானிகள்,  உயர் அதிகாரிகள்,  பொலிஸ் உயர் அதிகாரிகள்,  முப்படையினர்,  பொலிஸார்  மாவட்ட செயலக அதிகாரிகள்,  உத்தியோகஸ்தர்கள்  பாடசாலை மாணவர்கள் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வுகள் ஆரம்பித்து சில நிமிடங்களில் மழை கொட்டிய போதும் மழைக்குள்ளும் நிகழ்வுகள் நடைபெற்றன.