உத்திரபிரேதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூர் ராஜ்காட் பகுதியை சார்ந்தவர் குப்தா. இவர் வியாபாரியாக பணியாற்றி வருகிறார். இவரது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதன் காரணமாக., அதிகளவில் கடன் வாங்கியுள்ளார்.
வியாபாரத்தில் நஷ்டம் மற்றும் அதிகளவில் நஷ்டம் ஏற்பட்டு கடும் மனஉளைச்சலில் இருந்து வந்த நிலையில்., நேற்று தனது மனைவி மற்றும் அவரது ஒரு மகன் மற்றும் 2 மகள்களுக்கு விஷம் வழங்கியுள்ளார்.
இதனை அறியாத குழந்தைகள் மற்றும் அவரது மனைவி உணவை சாப்பிட பின்னர்., துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை அடுத்தபடியாக., ரமேஷ் இரயில் முன்னர் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்த தகவல் குறித்து விஷயம் அறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்., கடன் தொல்லையால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.