சென்னை அம்பத்தூரில் வீட்டில் சேர்க்க மறுத்த கணவனின் வாசம் முன், கைக்குழந்தையுடன் தாய் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அம்பத்தூரில் முகப்பேர் பகுதியை சேர்ந்த தினேஷ் (35), தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த பிரமிதா (32) என்பவருக்கும் திருமணம் நடைபெற்று 11 மாத கைக்குழந்தை உள்ளது.
திருமணம் நடந்தது முதலே வரதட்சணை கேட்டு தினேஷ் கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இதனால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட சண்டையால் கோபித்துக்கொண்டு பிரமிதா தன்னுடைய தாயின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் தந்தையுடன் கணவனின் வீட்டிற்கு திரும்பிய மனைவியை ராஜேஷ் வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்துள்ளார்.
உடனே கைக்குழந்தையுடன் கணவனின் வீட்டின் முன்பு அமர்ந்தவாறே பிரமிதா தர்ணா போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளார்.
இதற்கிடையில் தகவலறிந்து வந்த பொலிஸார் கணவன்-மனைவி இருவரையும் அழைத்து சமரச பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.