இந்தியாவில் தொழில் நிறுவனங்களுக்கு 9,000 கோடி கடன் வாங்கிய விஜய் மல்லையா அதை திருப்பி செலுத்த முடியாமல் இங்கிலாந்து சென்று அங்கே தஞ்சம் அடைந்தார். நீண்ட நாட்களாக அவரை இந்தியாவிற்கு கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு செய்து வந்தது.
இது தொடர்பான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், விஜய் மல்லையா அங்கிருந்த படியே வழக்கினை எதிர்கொண்டார். இந்த வழக்கில் புதிய திருப்பமாக இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் விஜய் மல்லையாவை நாடு கடத்துவதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. இந்தியாவிடம் ஒப்படைக்க அனுமதி கொடுத்து இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
மேலும் அவருக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் எனவும், மேல்முறையீட்டின் தீர்ப்பினைப் பொறுத்தே அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா இல்லையா என்பது தெரியவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டிலிருந்து முக்கிய நபரை கொண்டு வருவதற்காக தனி விமானம் ஒன்று தயாராக இருப்பதாக செய்தித்தாள்களில் தகவல் கசிந்தது என்பது குறிப்பிடத்தக்கது