பள்ளிகளில் நடக்கும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுக்க கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் எனத் தமிழக பெண்கள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில்உள்ள அரசுப்பள்ளிகளிகளில் பயிலும் குழந்தைகள், எந்தந்த விதங்களில் பாலியல் தொல்லைக்கு ஆளாகுகிறார்கள் என்பதுகுறித்து கருத்து கேட்பு செங்கல்பட்டில் நடைபெற்றது.
தமிழக பெண்கள் இயக்கம், மனித உரிமை மேம்பாட்டு அமைப்பு இணைந்து இந்த நிகழ்வை நடத்தின.
அப்போது, பள்ளிக் குழந்தைகளுக்கு, பாலியல் வன்முறைஎவை என்றும், அதற்கு எதிராக என்ன சட்டரீதியானநடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து விழிப்புணர்வு இல்லை. விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்பள்ளி மற்றும் தனியார் நிறுவனங்களில் இதற்கான குழுக்களை அமைத்திட வேண்டும்.
ஒரு சில இடங்களில் நடவடிக்கை எடுக்க பள்ளி ஆசிரியர்கள் முன்வந்தாலும் நிறுவனத்தின் பெயர் கெட்டுவிடும் என்ற பயத்தில் நடவடிக்கை எடுத்திட மறுக்கின்றனர்.
எனவே ஆசிரியர்களுக்கும் சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்திடவேண்டும்.
இளம் பெண்களுக்கான உதவி மையத்தை மாவட்டந்தோறும் அமைக்க வெண்டும். அதில் பயிற்சி பெற்றவர்களை நியமிக்க வேண்டும்.
பாலியல் வன்முறை தடுக்கும் வகையில், அரசுப் பள்ளிகள், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொறுத்த வேண்டும்’ என்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.