அமெரிக்காவில் பைபிள் வசனங்களை மறந்த மகனை, பலவிதமான முறைகளில் கொடுமைபடுத்திய பெற்றோர் இறுதியில் கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவின் மன்டோகோக் கவுண்ட்டியை சேர்ந்த ஏதன் ஹவுஸ்ஹவுல்ட்ஸ் என்கிற சிறுவன், பைபிள் வசனங்களை நினைவில் கொள்ளாமல் மறந்ததற்காக, சிறிய பெட்டியில் வைத்து எரித்துக்கொன்ற காப்பாளர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது நடந்த வழக்கு விசாரணையில், சிறுவனின் சட்டப்பூர்வமான பாதுகாவலர்கள் டிமோதி மற்றும் டினா தினமும் 13 விவிலிய வசனங்களை மனப்பாடம் செய்யுமாறு ஏதனிடம் கூறியுள்ளனர்.
ஆனால் சிறுவன் அவற்றை மறந்ததால், 19கிலோ எடை கொண்ட மரத்தை கையில் தூக்கியபடியே நிற்குமாறு தண்டனை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய தம்பதியினரின் 15 வயது மகன், ஏதனை கொடுமைப்படுத்தியதில் என்னுடைய பங்கும் இருக்கிறது. ஏதனையும் என்னுடைய இரட்டை சகோதரர்களையும் கண்காணிக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு என பெற்றோர்கள் கூறியிருந்தனர்.
அதனால் அடித்து, உதைத்து துன்புறுத்தினேன். தினமும் 100 முறை குத்துவேன். மேலும், அவனுடைய தலை மீது ஏறி நிற்பேன் என கூறினான்.
இந்த நிலையில் வழக்கினை கேட்டறிந்த நீதிபதி, டிமோதி மற்றும் டினா தம்பதியினர் குற்றவாளிகள் எனக்கூறி வழக்கினை மாற்றி உத்தரவிட்டார்.