பிணத்தை சாப்பிட்ட இளைஞர்: பயந்து நடுங்கிய மக்கள்….

நெல்லை மாவட்டத்தில் இறந்த மூதாட்டி ஒருவரின் உடலை அரிவாளால் வெட்டி சாப்பிட்ட இளைஞரை பிடித்து பொதுமக்கள் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூருக்கு அருகே டி.ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்த கனகசபாபதி என்பவரின் மகன் முருகேசன் (43).

இவருக்கு திருமணம் முடிந்து ஒரு மகளும், மகனும் உள்ளனர். முருகேசனுக்கு கஞ்சா, மது உள்ளிட்ட போதை பழக்கங்கள் இருந்ததால், கணவன் மனைவிக்கு இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் மனமுடைந்த மனைவி, தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

கடந்த சில நாட்களாகவே சுடுகாட்டில் புதைக்கப்படும் பிணங்களை யாரோ ஒருவர் சாப்பிடுவதாக பொதுமக்கள் மத்தியில் ஒரு அதிர்ச்சி தகவல் பரவியது. இதனால் அனைவரும் பீதியில் உறைந்து போய் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இறந்த ஒரு மூதாட்டியின் உடலை சுடுகாட்டில் தகனம் செய்துவிட்டு திரும்பியுள்ளார். ஒரு சிலர் மட்டும் அந்த மர்ம நபரை பிடிப்பதற்காக மறைவான இடத்தில் காத்துக்கொண்டிருந்தனர்.

அப்போது வேகமாக அரிவாளுடன் அங்கு வந்த முருகேசன், தீயை அணைத்துவிட்டு பிணத்தை சாப்பிட ஆரம்பித்துள்ளான்.

உடனே அவனை லாவகமாக பிடித்த பொதுமக்கள் பொலிசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்ட பொலிஸார், சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவமானது அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.