காதலனை லாட்ஜில் வைத்து தீர்த்து கட்டிய காதலி!

தமிழகத்தில் காதலனை லாட்ஜிற்கு அழைத்துச் சென்று காதலி அவரை துப்பாட்டாவால் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் குட்டகம் புளியம்பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருக்கு கார்த்திக் ராஜா என்ற மகன் உள்ளார்.

கார்த்திக்ராஜா அங்கிருக்கும் பாலிடெக்னிக் கல்லூரிய்ல் முதலாம் ஆண்டு படித்து வந்த நிலையில், கோபிச்செட்டிப்பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

இருவரும் படித்து வருவதாலும், கல்லூரி மாணவியை விட கார்த்திக்ராஜா ஒரு வயது குறைவானவர் என்பதாலும் மாணவியின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனால் கார்த்திக்ராஜா வீட்டை விட்டு வெளியேறி, காதலியுடன் குற்றாலத்திற்கு வந்து சேர்ந்துள்ளார். குற்றாலத்தில் இருக்கும் லாட்ஜ் ஒன்றில் இருவரும் தங்கிய நிலையில், சம்பவ தினத்தன்று இரவு 9 மணிக்கு கார்த்திக்ராஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிசாருக்கு தகவல் வந்துள்ளது.

இதையடுத்து உடலைக் கைப்பற்றிய பொலிசார், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மருத்துவமனைக்கு வந்த கார்த்திக்ராஜாவின் தந்தை ராஜ்குமார், தனது மகன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறி மகனின் சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

தங்கும் விடுதி உரிமையாளர் மற்றும் காதலியின் பெற்றோர் மீது குற்றம்சாட்டி கார்த்திக்ராஜாவின் பெற்றோர் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்மனு அளித்ததால் கார்த்திக்ராஜாவின் மரணம் பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில், கார்த்திக் ராஜா தனது சாதியை மறைத்து அந்த மாணவியை காதல் வலையில் வீழ்த்தி உள்ளார்.

ஏற்கனவே ஒரு இளைஞருடன் நட்பில் இருந்த அந்த மாணவி இருவரில் யார் சரிபட்டு வருவார்களோ அவரை காதலிக்கலாம் என்ற முடிவில் இருந்துள்ளார்.

மாணவியின் காதல் குறித்து அறிந்து வீட்டில் கடும் கட்டுப்பாடுகள் விதித்த நிலையிலும் கார்த்திக்ராஜா , மாணவியை விடாமல் துரத்தி, துரத்தி காதலித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் கார்த்திக் ராஜாவையும், அவரது தந்தை ராஜ்குமாரையும் அழைத்து காவல்துறையினர் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

அப்போது பொலிசார் மேற்கொண்ட விசாரணையின் போது தான், மாணவனின் உண்மையான ஜாதி மாணவிக்கு தெரியவந்துள்ளது.

இதனால் அவரை விட்டு விலக முடிவு செய்துள்ளார். ஆனால் கார்த்திக்கோ தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததால், அவரை விட்டு விலக நினைத்த மாணவி அவரை கேரளாவுக்கு செல்லலாம் என அழைத்து சென்றுள்ளார்.

கார்த்திக்ராஜாவுடன் பாலக்காடு, எர்ணாகுளம் என சுற்றி விட்டு கடந்த 1-ஆம் திகதி இருவரும் குற்றாலம் வந்துள்ளனர்.

அங்கிருக்கும் முருகவிலாஸ் லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அடுத்த நாள் 2-ஆம் திகதி பகலில் தனது காதலன் உறங்குவதாக நினைத்து வேறொரு நண்பருடன் அந்த மாணவி செல்போனில் பேசி உள்ளார்.

இதை கேட்ட கார்த்திக்ராஜா, அந்த நபர் குறித்து விசாரித்ததால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர் அப்போது துப்பட்டாவல் கார்த்திக்ராஜாவின் கழுத்தை நெரித்து அந்த மாணவி கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இந்த தகவல் அங்கிருக்கும் லாட்ஜ் மேலாளருக்கு தெரியவர, உதவி செய்வதாக கூறி, அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

கார்த்திக்ராஜா கொலை பற்றி வெளியில் சொன்னால் தன்னிடம் அத்துமீறியது குறித்து பொலிசிடம் கூறிவிடுவேன் என மிரட்டியதால், மாலை 4 மணிக்கு நடந்த சம்பவம் இரவு 9 மணிக்கு பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாணவி இப்போது அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், கார்த்திக்ராஜாவின் பிணக்கூறாய்வுக்கு பின்னரே அந்த மாணவி தெரிவித்த தகவல்கள் எந்த அளவிற்கு உண்மையானவை என்பது தெரியவரும் என்று பொலிசார் கூறியுள்ளனர்.