போக்குவரத்து விதிகளை மீறுபவர்களிடம் அபராதம் வசூலிப்பதில் ரொக்கமாக வசூலிக்கும் முறை ரத்து செய்யப்பட்டு, மின்னணு முறையில் மட்டுமே அபராதம் வசூலிக்க வேண்டும் என்று போக்குவரத்து காவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை அம்பத்தூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ரவிச்சந்திரன். இவர், அம்பத்தூர் தேசிய நெடுஞ்சாலை அருகே தனது போலீஸ் வாகனத்தில் அமர்ந்தபடி வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ, நேற்று சமூக வலைதளங்களில் பரவியது.
இதையடுத்து, ரவிச்சந்திரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக ரவிச்சந்திரன் தேனாம்பேட்டை பகுதியில் வாகனத்தில் சென்ற போலீஸ் கான்ஸ்டபிளை கீழே தள்ளிவிட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து அம்பத்தூர் பகுதிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
தற்போது அந்த பகுதியிலும் மீண்டும் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெறுவதுபோன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் உடனடியாக அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.