சாக்லேட் கொடுப்பதாக 5 வயது சிறுமியிடம் முதியவர் செய்த செயல்!

சென்னையில் சிறுமிக்கு சாக்லேட் கொடுப்பதாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த நபர் பொலிசில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் குடியிருப்பை சேர்ந்தவர் அலெக்ஸ் (55).

இவர் சாந்தோம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் காவலாளியாக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் அலெக்ஸ், தனது வீட்டருகில் உள்ள 5 வயது சிறுமிக்கு சாக்லேட் கொடுப்பதாக அழைத்துச் சென்று தனது வீட்டில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் அலெக்ஸை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.