மனைவியை நண்பரோடு சேர்ந்து கொலை செய்தது ஏன்?

இந்தியாவில் மனைவியும், மாமியார் வீட்டாரும் தன்னை துன்புறுத்தியும், அசிங்கப்படுத்தியும் வந்ததால் ஆத்திரமடைந்த கணவன் மனைவியை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தின் குர்கானை சேர்ந்தவர் பங்கஜ் பரத்வாஜ் (28). இவருக்கும் வனிஷா சர்மா என்ற பெண்ணுக்கும் கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் வனிஷா சில தினங்களுக்கு முன்னர் தனது வீட்டில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சடலத்தை கைப்பற்றினார்கள். வனிஷா 40 முறை கத்தியால் குத்தி கொல்லப்பட்டது தெரியவந்தது.

சம்பவம் நடந்த பின்னர் வீட்டிலிருந்து வனிஷாவின் கணவர் பங்கஜ் காணாமல் போயுள்ளார்.

இதையடுத்து தலைமறைவாக இருந்த பங்கஜை பொலிசார் கைது செய்தனர்.

அவரின் நண்பர் நசீமையும் பொலிசார் கைது செய்த நிலையில் இருவரும் சேர்ந்து வனிஷாவை கொன்றதை ஒப்பு கொண்டனர்.

பங்கஜ் பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், என் மனைவி, மாமியார் மற்றும் அவர் குடும்பத்தார் என்னை தொடர்ந்து துன்புறுத்தியும், அசிங்கப்படுத்தியும் வந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த நான் வீட்டில் என் மனைவி என்னுடன் தனியாக இருக்கும் போது அவரை கொலை செய்தேன் என கூறியுள்ளார்.

தொடர்ந்து இரண்டு குற்றவாளிகளிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.