பேஸ்புக் கணக்கை ஒரு மாதமாவது டீஅக்டிவேட் செய்தால், மகிழ்ச்சியாக வாழலாம் என நியூயோர்க் பல்கலைக்கழகத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சமூக வலைதளங்களின் நல விளைவுகள் (The Welfare Effects of Social Media) எனும் தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இதை கண்டறிந்ததாக நியூயோர்க் பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது. பேஸ்புக் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு உங்களை அதற்கு அடிமையாக்கி விடுகிறது. ஒரு நாளைக்கு குறைந்தபட்சமாக ஒரு மணி நேரமாவது பேஸ்புக் பயன்படுத்தும் பழக்கம் இங்கே பலருக்கு இருக்கிறது.
பேஸ்புக் கணக்கை டீ அஆக்டிவேட் செய்தால், தேவையற்ற அரசியல் நாடகங்களை தவிர்க்கலாம், நிஜ உலகோடு தொடர்பில் இருக்கலாம். மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க நாம் கஷ்டப்படத் தேவையில்லை, குறிப்பாக குடும்பத்தோடும் நண்பர்களோடும் நீண்ட நேரத்தை செலவு செய்யலாம் என்ற காரணங்களை முன்வைக்கிறது இந்த ஆய்வு. பேஸ்புக்கின் மூலம் செய்திகளை அறிந்து கொள்வது, சமூக செயல்பாடுகளில் ஈடுபடுவது, தொலை தூர நண்பர்களுடன் தொடர்பில் இருப்பது என பல்வேறு நன்மைகள் இருந்தாலும், இதனால் நிஜ உலகோடு தொடர்புடையவர்களுக்கு மட்டுமே பயன்.
பேஸ்புக் அடிமையாகிவிட்டால் நீங்கள் வாழும் சமூகத்தை விட்டு பிரிக்கப்படுவீர்கள். கணக்கெடுப்பின்படி 2500 இற்கும் அதிகமான பேஸ்புக் பயன்பாட்டாளர்கள், தொடர் பயன்பாட்டின் இடையே ஒரு மாதம் கணக்கை டீஅக்டிவேட் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். இதன்மூலம் மன அமைதியும் நிம்மதியும் கிடைக்கும் என ஆய்வு தெரிவிக்கிறது.