இன்று காலையிலிருந்து நடக்கும் அதிசயம்….!!

இலங்கையில் மக்கள் நிம்மதியாகவும், நலமுடனும் வாழ வேண்டும் என்று அன்பர் ஒருவர் நீண்டதூர பிரதட்டை நேர்த்திக்கடனை மேற்கொண்டுள்ளார்.

மன்னாரில் இருந்து அனுராதபுரம் வரை 150KM தூரம் இந்த பிரதட்டை நேர்த்திக்கடனில் குறித்த அன்பர் உருண்டு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் இன்று காலை 7.00 மணிக்கு யாத்திரை பயணத்தை ஆரம்பித்துள்ளார் என்றும், முதற்கட்டமாக மன்னார் தள்ளாடியில் இருந்து திருக்கேதீஸ்வரம் வரை செல்லவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செயற்பாட்டை மக்கள் பலரும் நெகிழ்ச்சியுடன் பார்த்துச் செல்வதாகவும் கூறப்படுகின்றது.