குமரி மாவட்டம், கோழிப்போர்விளை பகுதியைச் சேர்ந்த 17 வயது இளம் பெண்ணுக்கும், கருங்கல் பகுதியைச் சேர்ந்த ஷாஜி என்ற 24 வயதான வாலிபருக்கும் திருமணம் செய்யஇரு வீட்டாரும் முடிவு செய்திருந்தனர்.
பெண்ணுக்கு 18 வயது எட்டியதும் திருமணம் நடத்த இரு வீட்டார் திட்டமிட்டுஇருந்தனர். இளம் பெண்ணின் தாயார் திருவனந்தபுரத்துக்கு செல்லவிருந்ததால், தனது மகளை ஷாஜியின் வீட்டில் விட்டுவிட்டு சென்றார்.
திடீரென அந்த பெண்ணுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, பெண்ணின் தாயார் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் கர்ப்பம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பெண்ணிடம் விசாரித்தபோது, ஷாஜி ஏமாற்றி பாலியல் வல்லுறவு கொண்டது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து குளச்சல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பெண்ணின் உறவினர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்து, ஷாஜியை திங்களன்று கைது செய்தனர்.