சிறுநீரகத்தை பாதுகாப்பது எப்படி.!! 6 மூல மந்திரங்கள்!

மனித உடலுறுப்பில் முக்கியமான உறுப்புகளில் ஒன்று சிறுநீரகம். சிறுநீரகத்தின் முதன்மை மற்றும் முக்கிய பணி கழிவுகளை வெளியேற்றுவது என்று பலர் நினைத்து கொண்டு வருகின்றனர். சிறுநீரகம் நமது உடலில் பல்வேறு விதமான செயல்களை செய்து உடலுக்கு தேவையான ஹார்மோன்கள் மற்றும் சக்திகளை வழங்குகிறது.

சிறுநீரகத்தில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படும் சமயத்தில் மட்டுமே அதனை பற்றி கவலை கொள்கிறோம்., மீதமுள்ள நேரங்களில் அது குறித்து எந்த விதமான யோசனைகளும் செய்வது இல்லை., எந்த ஒரு விஷயத்திற்கும் வரும் முன் காப்பது சிறந்தது என்ற பழமொழியை நினைவில் கொண்டு செயல்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

சாப்பிடாமல் பட்டினியாக இருப்பது:

நாம் உணவு உண்ணாமல் இருக்கும் சமயங்களில் சிறுநீரகமானது நமது உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. இதன் காரணமாக தொடர்ச்சியாக உணவு உண்ணாமல் இருக்கும் பட்சத்தில் நமது சிறுநீரகம் பாதிப்படைய வாய்ப்புள்ளது., மேலும்., காலை உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க கூடாது…

வலி நிவாரணிகள்:

உடல் சோர்வு மற்றும் பல காரணத்திற்க்காக உட்கொள்ளப்படும் வலி நிவாரணிகள் அதிகளவில் பயன்படுத்த படும் பட்சத்தில் சிறுநீரகத்தை பாதிக்கும்.

அதிகளவு மது அருந்தும் பழக்கம்:

மது அருந்துவதால் சிறுநீரகமானது அதிகளவில் பாதிப்படைகின்றது. மேலும்., எந்த விதமான உணவும் அருந்தாமல் மதுவை அருந்தும் பட்சத்தில் சிறுநீரகங்கள் நேரடியாக பாதிப்படைகின்றது.

உணவில் கலக்கப்படும் உப்பு:

தினமும் சமையல் செய்யும் போது உணவு பொருளில் போடப்படும் உப்பு அளவாக சேர்த்து கொள்ள வேண்டும்., அதிகளவில் உப்பு சேர்க்கும் போது சிறுநீரகத்திற்கு அதிகளவு வேலைகளை வழங்கி., அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தும்.

நீர் அருந்தாமல் இருப்பது:

சிறுநீரகத்திற்கு தண்ணீர் என்பது மிகவும் முக்கியமான பொருளில் ஒன்றாகும். உடலில் உள்ள அசுத்தமான நீரை வெளியேற்றுவதற்காக தண்ணீர் முக்கிய பங்கு வருகிறது. இன்று இருக்கும் பலர் மற்றும் இளைய தலைமுறையினர் பணி மற்றும் பல காரணங்களுக்காக அதிகளவில் நீரை அருந்தும் பழக்கத்தை வைத்திருப்பதில்லை. இதனால் சிறுநீரகத்தில் பல பாதிப்புகள் ஏற்படும்.

அதிக நேரம் சிறுநீரை அடக்குவது:

சில சூழ்நிலைக்காக சிறுநீரை அடக்கி வைப்பது பெரும் பிரச்சனையில் கொண்டு சேர்க்கும். இதன் காரணமாக சிறுநீரகத்தில் கல் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாக சிறுநீரகம் செயலிழக்கவும் வாய்ப்புள்ளது. இதனால் யாரும் எந்த விதமான சூழ்நிலையும்., அதிக நேரம் சிறுநீரை அடக்காதீர்கள்.