திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் குட்டகம் புளியம்பட்டியை சார்ந்தவர் ராஜ்குமார். இவரது மகனின் பெயர் கார்த்திக் ராஜா., இவர் அங்குள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் வருடம் பயின்று வருகிறார். இவருக்கும் கோபிச்செட்டிபாளையத்தை சார்ந்த மாணவி ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது காதலாக மலரவே., இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இவர்கள் இருவரின் காதல் இருவீட்டாருக்கும் தெரியவரவே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும்., கல்லூரி மாணவியின் வயதை விட கார்த்திக் ராஜாவின் வயதும் ஒரு வயது குறைவு என்பதால் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில்., வீட்டை விட்டு வெளியேறிய இவர்கள் இருவரும் குற்றாலத்தில் இருக்கும் விடுதியில் அறையெடுத்து தங்கவே., சம்பவத்தன்று இரவு சுமார் 9 மணியளவில் இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்க்கு விரைந்த காவல் துறையினர் கார்த்திக் ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தகவலானது கார்த்திக் ராஜாவின் தந்தைக்கு தெரிவிக்கப்பட்டு., சம்பவ இடத்திற்கு வந்த கார்த்திக் ராஜாவின் தந்தை அவரது சாவில் மர்மம் இருப்பதாகவும்., இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கார்த்திக் ராஜாவின் தந்தை விடுதியின் உரிமையாளர் மற்றும் காதலியின் பெற்றோர்கள் மீது புகார் அளித்ததை அடுத்து., அவர்களிடம் காவல் துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். அந்த விசாரணையில்., பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானகின.
கார்த்திக்ராஜா தனது ஜாதியை மறைத்து முதலில்., கல்லூரி மாணவியை காதல் வலையில் விழவைத்துள்ளார். அந்த கல்லூரி மாணவி ஏற்கனவே மற்றொரு இளைஞரிடம் நட்பாக பழகிக்கொண்டு இருக்கும் சமயத்தில்., இருவரும் காதலிப்பதை அறிந்து இருவரில் யாரை காதலிக்கலாம் என்ற குழப்பத்தில் இருந்து வந்துள்ளார்.
இந்த விசயமானது மாணவியின் இல்லத்தாருக்கு தெரியவே., இந்த தகவலை அறிந்தும் கார்த்திக்ராஜா தொடர்ந்து காதல்வலை விரித்துள்ளார். இந்த விசயத்தை அறிந்த மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே., கார்த்திக்ராஜா மற்றும் அவரது தந்தையை அழைத்து காவல் துறையினர் கண்டித்துள்ளனர். மேலும்., காவல் துறையினர் விசாரணை செய்யும் நேரத்திலேயே., கார்த்திக்ராஜாவின் ஜாதியானது தெரியவந்துள்ளது.
இதனை அறிந்த மாணவி கார்த்திக்ராஜாவை விட்டு விலக முடிவு செய்து., அவரை விட்டு விலக தொடங்கியுள்ளார். காதல் வலையை தொடர்ந்து விரித்த வண்ணம் இருந்த கார்த்திக்ராஜாவை கேரளாவுக்கு செல்ல விருப்பம் தெரிவித்து மாணவி அழைத்துள்ளார். இவரின் அழைப்பை ஏற்ற கார்த்திக்ராஜா மற்றும் கல்லூரி மாணவி கேரளாவில் உள்ள எர்ணாகுளம்., பாலக்காடு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 ம் தேதியன்று குற்றாலத்திற்கு வந்துள்ளனர்.
குற்றாலத்தில் இருக்கும் முருகவிலாஸ் என்ற விடுதியில் அறையெடுத்து தங்கிய இவர்கள்., 2 ம் தேதியன்று காதலன் உறங்கிக்கொண்டு இருக்கிறார் என்று நினைத்து மற்றொரு இளைஞரிடம் பேசிக்கொண்டு இருந்தார். இதனை கவனித்த கார்த்திக்ராஜா., இது குறித்து கேட்கவே இவர்களுக்குள் வாக்குவாதமானது முற்றியுள்ளது. இதில் கார்த்திக்ராஜாவின் கழுத்தை துப்பட்டாவில் நெரித்த காரணத்தால் அவர் இறந்துள்ளார்.
இதனை அறிந்து கொண்ட விடுதியின் உரிமையாளர் உதவி செய்வதாக கூறி அவருக்கு பாலியல் தொல்லை வழங்கியுள்ளார். மேலும்., இந்த கொலை பற்றி ஏதேனும் காவல் துறையினருக்கு தெரிவித்தால்., என்னிடம் அத்துமீறிய விசயத்தை காவல் துறையினரிடம் கூறி விடுவேன் என்று தெரிவித்துள்ளார். இதன் காரணமாக மாலை நடைபெற்ற சம்பவம் 9 மணிக்கு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையானது தீவிரப்படுத்தப்பட்டு., கார்த்திக்ராஜாவின் பிரேத பரிசோதனையில் வரும் தகவலை வைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும் மற்றும் உண்மை தெரியவரும் என்று காவல் துறையினர் தெரிவித்து வருகின்றனர்.