சமீபத்தில் பாலியல் தொழிலாளிகளுக்கு வாழைப்பழங்களில் செய்தி எழுதி அனுப்பிய பிரித்தானிய இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மோசமாக கிண்டல் செய்யப்படும் நேரத்தில், இளவரசர் ஹரியின் தலை வேகமாக வழுக்கையாகிக் கொண்டே வருவதற்கு மேகன்தான் காரணம் என்கிறார் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிரபல பத்திரிகையாளரான Piers Morgan, சமீபத்தில் வாழைப்பழங்களில் செய்தி எழுதி பாலியல் தொழிலாளிகளுக்கு செய்தி அனுப்பிய மேகனை மோசமாக கிண்டல் செய்துள்ளார்.
வாழைப்பழங்கள் இரட்டை அர்த்தம் கொண்டவையாக ஆபாச பொருளாக கருதப்படும் நிலையில், அவற்றை பாலியல் தொழிலாளிகளுக்கு அனுப்பியதை Piers Morgan கிண்டல் செய்துள்ளார்.
அதோடு விடாமல், பாலியல் தொழிலாளிகள் கஷ்டப்பட்டு தங்கள் வாழ்வாதாரத்திற்காக உடலை விற்பதை அனைவரும் அறிந்துள்ள நிலையில், நீங்கள் நேசிக்கப்படுகிறீர்கள் என்று எழுதிய வாழைப்பழங்களை அவர்களுக்கு அனுப்பியுள்ளார் மேகன்.
அன்பு என்றால் என்னவென்றே தெரிவாமல் கடனுக்கு பாலுறவு கொளும் பெண்களுக்கு, நீங்கள் நேசிக்கப்படுகிறீர்கள் என்று மேகன் செய்தி அனுப்பியிருக்கிறார் என்கிறார் Piers Morgan.
ஹரியின் தலையில் வேகமாக முடி கொட்டுவதைக் குறித்து கிண்டல் செய்துள்ள அவர், திடீரென வாழைப்பழங்களைக் கண்ட மேகன், எனக்கு ஒரு ஐடியா தோன்றியிருக்கிறது என்று கூற, வேறுவழியில்லாமல் தலையை சொறிந்து கொண்டே, செயற்கையாக ஹரி சிரிப்பதை புகைப்படங்களில் நன்றாகவே காண முடிகிறது என்கிறார்.
இப்படி அவ்வப்போது மேகனுக்கு புதுப்புது ஐடியாக்கள் வர, அப்போதெல்லாம் தன் தலையை சொறிந்தே ஹரிக்கு முடி கொட்டி விட்டது என்றும் கிண்டல் செய்கிறார் Piers Morgan.