இந்தியா வந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்… ஒரே நாளில் எடுத்த அதிரடி முடிவு

இந்தியாவுக்கு சுற்றுலா வந்த பெல்ஜியம் நாட்டுப் பெண், இங்கு சிலர் கொடுத்த தொந்தரவால் ஒரே நாளில் சொந்த நாட்டுக்கு திரும்பிச் சென்றுள்ளார்.

பெல்ஜியத்தை சேர்ந்த பெண் இந்தியாவில் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து அந்நாட்டு தூதரகத்திடம் கடிதம் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.

கடிதமானது பொலிசாருக்கு அனுப்பட்டுள்ளது.

அதில், கடந்த மாதம் 6-ம் திகதி டெல்லிவந்த பின்னர் ஒரு சிம் கார்டை வாங்கிவிட்டு, அங்கிருந்து புதுடெல்லி பகுதிக்குச் செல்வதற்காக ஆட்டோவில் ஏறினேன்.

இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்ளும் முன்பே அங்கு தங்குவதற்கான ஹொட்டலை முன்பதிவு செய்ததால் நேராக ஆட்டோவில் அங்கு சென்று கொண்டிருந்தேன்.

சிம் கார்டு ஆக்டிவேட் ஆகாததால், என்னால் யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை. அப்போது இருவர் ஆட்டோவை வழிமறித்து பொலிஸ் அதிகாரிகள் என ஐடி கார்டை காண்பித்தனர்.

இந்தப் பகுதியில் போராட்டம் நடைபெறுவதால், இந்த வழியாகச் செல்ல முடியாது எனக் கூறினர். பின்னர் ஒரு முகவரியைக் கொடுத்து, சுற்றுலா பொலிசாரிடம் அனுமதி வாங்கி சொன்னார்கள்.

நான் சென்ற ஆட்டோ, அந்த இடத்திற்குச் சென்ற நிலையில் 6 நபர்கள் சீருடையில் வந்தனர். அவர்களிடம் நடந்தவற்றைக் கூறி அனுமதிகேட்டேன். நான் தங்கவேண்டிய பகுதிக்குச் செல்ல முடியாது என்றும், உடனடியாக புதுடெல்லியை விட்டு வெளியேறுமாறும் அறிவுறுத்தினர்.

அப்போது அவர்களில் ஒருவர், நீங்கள் அணிந்திருக்கும் நகைகள் தங்கமா என்று கேட்டார். உடனடியாக நகைகளைக் கழற்றிவிடுங்கள் என்றனர்.

பின்னர் நான் புக் செய்திருந்த ஹொட்டல் அறைகளை ரத்து செய்யப்பட்டுவிட்டதாகக் கூறினர்.

இதனால், செய்வதறியாமல் திகைத்தேன். அப்போது, வெளியில் காத்திருந்த ஆட்டோவுக்கு அழைத்துச் சென்றனர். இவர் மத்திய டெல்லிக்கு செல்ல வேண்டும் என ஆட்டோ ஓட்டுநரிடம் கூறினார்.

அவர் ஒரு டிராவல் ஏஜென்சிக்கு அழைத்துச்சென்றார். அங்கு, ஹொட்டல் புக் செய்து தருவதாகக் கூறினார்கள்.

இதையடுத்து அவர்கள் காண்பித்த ஹொட்டல்கள் எனக்குப் பிடிக்கவில்லை. இதையடுத்து, ஒரு காரில் வலுக்கட்டாயமாக இரண்டு பெண்களுடன் செல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இறுதியில், ஒரு ஹொட்டலை தேர்வு செய்தேன்.

அதற்காக, 40 டாலர்களை வழங்க ஒப்புக்கொண்டேன். அந்த கார் ஓட்டுநர் வரவேற்பு தளத்தில் இருந்த பெண்ணிடம் ஏதோ பேசினார். அதையடுத்து, அவர்கள் என்னை மூன்றாம் தளத்திற்கு அழைத்துச்சென்றனர். அந்த அறையில் ஜன்னல்கள் இல்லை. இண்டர்நெட் வசதியும் இல்லை எனக் கூறினார்கள்.

நான் கதவை அடைத்துக்கொண்டு உள்ளேயே இருந்தேன். சிலர் அவ்வப்போது வந்து கதவுகளைத் தட்டினர். ஆனால் நான் திறக்கவில்லை. சிறிது நேரத்தில் எனது சிம்கார்ட் ஆக்டிவேட் ஆனது.

உடனடியாக ரிஷிகேஷில் எனக்குத் தெரிந்த ஒருவரை தொடர்புகொண்டு, நடந்ததை விவரித்தேன். அவர் உடனடியாக நான் புக் செய்திருந்த ஹொட்டலுக்கு தொடர்புக்கொண்டு விசாரித்தார். அப்போது எனது புக்கிங் ரத்துசெய்யப்படவில்லை என்று பதிலளித்தனர். இதையடுத்து, நான் புக் செய்திருந்த ஹொட்டலை சேர்ந்தவர்கள் வந்து என்னை அழைத்துச்சென்றனர்.

அடுத்த நாளே முதல் விமானத்தில் இந்தியாவை விட்டுக் கிளம்பிவிட்டேன் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகப் பேசியுள்ள பொலிசார் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ளதோடு, பெண் கூறிய இடங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.