கொலம்பியாவை சேர்ந்த ஒரு இளம் தம்பதி தாங்கள் குழந்தை பெற்று கொள்ள போவதில்லை என அறிவித்ததோடு, ஆண்களுக்கான கருத்தடையை கணவர் செய்து கொண்டுள்ளார்.
ஆண்ட்ரீஸ் ப்ளூ என்ற ஆணும், நதாலி கஸ்மேன் என்ற பெண்ணும் கடந்த 2015லிருந்து தம்பதியாக வாழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் இருவரும் சேர்ந்து குழந்தை பெற்று கொள்ளபோவதில்லை என தற்போது அறிவித்துள்ளனர்.
இதற்கு ஒருபடி மேலே போய் ஆண்ட்ரீஸ் Vasectomy எனப்படும் ஆண்களுக்கான கருத்தடை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.
குழந்தையை ஏன் பெற்று கொள்ள விரும்பவில்லை என தம்பதி பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர்.
அதில், நாங்கள் எப்போதும் பெற்றோர்களாக மாட்டோம், இந்த பூமியில் ஜனத்தொகை அதிகமாகிவிட்டதோடு, உலகம் மோசமாக உள்ளது.
இந்தநிலையில் இன்னொரு மனிதனை பூமிக்கு கொண்டு வர நாங்கள் விரும்பவில்லை.
ஏற்கனவே பல சிறுவர் சிறுமிகள் சாலைகளில் வாழ்வதையும், போதைக்கு சிறு வயதிலேயே அடிமையாவதும், சண்டை போட்டு கொள்வதும் நடக்கிறது.
இந்த மோசமான உலகில் எங்கள் குழந்தையும் இதுபோன்ற நிலையை அனுபவிக்க நாங்கள் விரும்பவில்லை என்பதால் இம்முடிவை எடுத்தோம்.
அதே நேரத்தில் மற்றவர்கள் குழந்தை பெற்ற கொள்வதை நாங்கள் ஆதரிக்கிறோம். காரணம் மனிதர்கள் பூமியில் வாழ்வது தொடர வேண்டும்.
குழந்தைகளை பெற்று அவர்களை படிக்க வைத்து நல்ல மனிதர்களாக மாற்றுபவர்களை நாங்கள் மதிக்கிறோம் என பதிவிட்டுள்ளனர்.
தம்பதியின் இந்த முடிவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர சமூகவலைதளங்களில் குவிந்து வருகிறது.