கதறும் இளம் பெண்கள் – வட்டாட்சியரின் இச்சையால் அரங்கேறிய துயரம்.!

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் வட்டாட்சியர் ஒருவர் அந்த அலுவலகத்தில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றும் ஒருவரைப் பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுத்ததுகுறித்துப் புகார் செய்ய முயன்ற காரணத்தால் தன்னையும் மற்றொரு பெண்ணையும் வட்டாட்சியர் பணி நீக்கம் செய்துள்ளதாகப் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர்தனது புகாரில் உறுதியாக உள்ளார்.

ஏற்கனவே அந்தப்பெண் வரதட்சிணை கொடுமையால் தீக் கொளுத்தித் தற்கொலைக்கு முயன்றதால் மாற்று திறனாளியாகி 2 குழந்தைகளுடன் தனியாக வாழ்த்து வருகிறார்.

அவருடைய பரிதாபநிலையைக் கண்ட அப்போதைய மாவட்ட ஆட்சியர் தற்காலிகப் பணியை வழங்கியுள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில் அவர் பணிக்கு வரவில்லை. எனவே வேறு தற்காலிக ஊழியர்களை அந்தப் பணியில் அமர்த்தியுள்ளோம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பணியிடங்களில் எழும் பாலியல் குற்றங்களை விசாரிக்கவும், தடுப்பதற்கான சட்ட விதிகளின்படி விசாரணை குழுஅமைத்துச் செயல்படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.

எனவே சட்டப்பிரிவு 4(2-சி) ன் படி பெண்கள் பிரச்சினைகளில் ஈடுபாடு உள்ளவர் பாலியல் புகார்களை அணுகிய அனுபவம் உள்ள செயல்பாட்டாளர் ஒருவரை உள்ளடக்கிய குழு இந்தப் புகாரைவிசாரிக்க வேண்டும்.

அதோடு பாதிக்கப்பட்ட இந்தப் பெண்ணுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் மேலும் இந்தக்கோரிக்கையை வலியுறுத்திப் பிப் 12ஆம் தேதி போராட்டம் நடத்திடத் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும்பாதுகாப்பார் உரிமைகளுக்கான சங்கம் முடிவு செய்துள்ளது