இங்கிலாந்தில் பிறந்ததும் பிஞ்சுக்குழந்தையை கத்தரியால் கிழித்து கொடூரமாக கொலை செய்த தாய்க்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இங்கிலாந்தின் பர்ன்லேவின் பகுதியை சேர்ந்த ரேச்சல் டன்ஸ்டில் (28) என்கிற தாய்க்கு, 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
ஆனால் அதனை கணவரிடம் தெரிவிக்காத ரேச்சல் வேகமாக கழிவறைக்கு சென்று அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
சிறிது நேரம் கழித்து மெதுவாக கதவை திறந்த அவர், கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது என கணவர் Tunstill-விடம் கூறியுள்ளார்.
உடனே அவர் மருத்துவமனைக்கு செல்ல மனைவியை அழைத்துள்ளார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த ரேச்சல், நானே பார்த்துக்கொள்கிறேன், நீ இரண்டு கத்தரிகோல் மட்டும் எடுத்து வா என கேட்டுள்ளார்.
பின்னர் குழந்தையை சரமாரியாக 15 முறை குத்தி கொலை செய்து குப்பைத்தொட்டியில் போட்டு வைத்துள்ளார்.
இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கணவன்-மனைவி இருவரையும் கைது செய்தனர்.
இந்த நிலையில் வழக்கு விசாரணை இன்று நீதிமன்றத்திற்கு வந்த பொழுது, Tunstill-ஐ நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது. மேலும், இரக்கமின்றி பிஞ்சுக்குழந்தையை கொலை செய்த ரேச்சலிற்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது.