யாழ். போதனா வைத்தியசாலையின் தாதி ஊழியர்கள் இன்று காலை மேற்கொண்ட போராட்டத்தின் காரணமாக அவசர சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வருகைத்தந்திருந்த நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் இரு தாதிய உத்தியோகத்தர்கள் தொடர்பில் தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்து, அதற்கு எதிர்ப்பினைக் காட்டும் வகையில் வைத்தியசாலையில் பணி புரியும் அனைத்து தாதி உத்தியோகத்தர்களும் இன்றையதினம் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் காரணமாக இன்றைய தினம் அவசர சிகிச்சையின் நிமித்தம் வைத்தியசாலைக்கு வருகைத்தந்த நோயாளர்கள் அனைவரும் பாரிய சிக்களை எதிர்நோக்கியிருந்தனர்.
ஊடகங்களில் வெளியான செய்தியால் தாம் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்தே தாதிய ஊழியர்கள் இன்றைய போராட்டத்தியிருந்தனர்.
எனினும் உயிர் காக்கும் உன்னத தொழிலில் ஈடுபட்டுள்ள ஒரு சாராரர் தமது சொந்த மன உளைச்சல்களுக்காக நோயாளர்களை கண்டுகொள்ளாமல் பணி பகிஸ்கரிப்பை மேற்கொண்டிருப்பது பலரிடத்திலும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது அங்கு வருகைத் தந்த நோயாளர்களை பெரிதும் பாதித்துள்ளதோடு, வைத்தியசாலை ஊழியர்களை விட அதிக மன உளைச்சலுக்கு நோயாளர்கள் உள்ளாகியுள்ளமை வருத்தத்திற்குரியது.