லண்டனில் பிரபல நடிகரின் மகள் அதிக போதைப்பொருள் எடுத்துக்கொண்டதால் கொஞ்சம் கொஞ்சமாக இறப்பதை அவருடைய காதலன் வீடியோ எடுத்துள்ளதாக நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது.
லண்டன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் மிகவும் பிரபலமானவர் ஜான் மிக்கி. இவருடைய மகள் லூயில்லா பிளெட்சர்-மிச்சி (24), தன்னுடைய காதலன் சியோன் ப்ரோடன் (29) உடன் 2017ம் ஆண்டு டோர்செட் பகுதியில் நடைபெற்ற இசைநிகழ்ச்சிக்கு சென்றிருந்தார்.அங்கு அதிக போதைப்பொருள் உட்கொண்டதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த வழக்கானது இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சம்பவம் நடந்த அன்று லூயில்லாவிற்கு அதிக போதைப்பொருளை சியோன் கொடுத்ததாக குற்றசாட்டு எழுந்தது.
ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த சியோன், நான் போதைப்பொருளை வாங்கவோ அல்லது கொடுக்கவோ இல்லை. நான் அந்த இடத்திற்கு செல்வதற்கு முன்பே அவர் வாங்கி வைத்திருந்தார் என கூறினார்.
பின்னர், லூயில்லா அதிக போதைப்பொருளால் பாதிக்கப்பட்டு சிறிது சிறிதாக இறந்து கொண்டிருந்த பொழுது, உதவி செய்யாமல் சியோன் செல்போனில் படம் பிடித்ததாக கூறப்பட்டது.
மேலும் அந்த வீடியோ காட்சிகள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டன. அந்த வீடியோவில், என்னுடைய அம்மாவிற்கு போன் செய் என லூயில்லா கூறுகிறாள். ஆனால் அதற்கு பதிலளித்த சியோன், முதலில் உன்னுடைய செல்போனை கீழே வை என கூறியிருப்பது பதிவாகியிருந்தது.
பின்னர் வழக்கு விசாரணையை கேட்டறிந்த நீதிபதி, வழக்கினை மற்றொரு நாளைக்கு மாற்றி வைத்து உத்தரவிட்டார்.