சென்னை பட்டினப்பாக்கத்தில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் குடும்பத்துடன் வசிப்பவர் தேவராஜ். இவர் அப்பகுதியயில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் வசிக்கும் குடியிருப்பில் இருந்த 5-ம் வகுப்பு படித்து வரும் 9 வயது சிறுமியிடம் சாக்லெட் தருவதாக கூறி தனது வீட்டிற்குள் அழைத்துச் சென்றுள்ளார்.
அவர் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் சிறுமி பயத்தில் சம்பவம் குறித்து யாரிடமும் கூறாமல் இருந்துள்ளாள். இந்த நிலையில், இருதினங்களுக்கு முன்பு, சிறுமி பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தபோது சிறுமியை வீட்டிற்கு அழைத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி பயத்துடன் வீட்டிற்கு ஓடிவிட்டாள். இதனையடுத்து பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறி அழுதுள்ளார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்களுடன் சென்று அந்த கொடூரன் தேவராஜுக்கு தர்மஅடி கொடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், தேவராஜை பட்டினப்பாக்கம் போலீசார் மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். காமக்கொடூரன் தேவராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.