திருமணம் செய்யாமல் நடிகையுடன் சேர்ந்து வாழ்ந்தேன்…. : நடிகர் சரத்பாபு விளக்கம்

நடிகை ரமாபிரபா தனது சொத்துகளை சரத்பாபு அபகரித்து விட்டதாக ஐதராபாத்தில் புகார் அளித்ததையடுத்து அது தொடர்பாக சரத்பாபு விளக்கம் அளித்துள்ளார்.

ரமாபிரபா அளித்துள்ள புகாரில், நானும், சரத்பாபுவும் 1980-களில் ஒன்றாக வாழ்ந்தோம். 1988-ல் அவரை பிரிந்து விட்டேன். அப்போது ஏமாற்றி எனது சொத்துகளை அபகரித்து விட்டார். சென்னையில் இருந்த எனது வீட்டையும் பறித்துக் கொண்டார் என புகார் அளித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள நடிகர் சரத்பாபு, நான் பிறக்கும்போதே வசதியாக பிறந்தவன், இதனால் அடுத்தவர்களின் சொத்துக்களை அபரிக்கமாட்டேன்.

சினேகாவை 1990-ல் திருமணம் செய்தேன். அதற்கு முன்பு நானும் ரமா பிரபாவும் சேர்ந்து வாழ்ந்தோம். அதற்கு உறவுக்கு பெயர் இல்லை. எனவே அவர் எனது முதல் மனைவி என்பது தவறு. நாங்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை.

நான் ரமாபிரபாவுக்கு 60 கோடி செலவில் வாங்கிகொடுத்த வீட்டினை தற்போது மீண்டும் திரும்பி வாங்கிகொண்டேன், இதில் என்ன தவறு இருக்கிறது என கூறியுள்ளார்.