அதிபர், டிரம்பின் உரையாற்றும் ஸ்டேட் ஆஃப் யூனியன் நிகழ்வில் கலந்து கொள்ள இருக்கும் டிரம்ப் பெயர் கொண்டசிறுவன் உடன்படிக்கும் மாணவர்களால் கடும் கேலி கிண்டலுக்கு ஆழாகி அவதிபட்டு வருகிறான்.
அமெரிக்காவில் ஒவ்வொருஆண்டும் ஸ்டேட் ஆஃப் யூனியன்உரையாற்றும் நிகழ்வு நடை பெறுகிறது. இதில் அதிபர் டிரம்ப் கலந்து கொண்டு உரையாற்றவது வழக்கம். மேலும் இதில் கலந்து கொள்ளும் 13 விருந்தினர்களில் ஒரு பள்ளி சிறுவனும்இடம்பெற்றுள்ளார்.
வில்மிங்டனில்வசிக்கும் 11 வயது ஜோஷ்வா டிரம்ப்புக்கும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. ஆனால் பெயரில் டிரம்ப் என இருப்பதால் அந்தசிறுவன் மற்ற மாணவர்களால் தொடர்ந்து கேலிக்கு உள்ளாக்கப்படுவதாக பெற்றோர் வருத்தம்தெரிவித்துள்ளனர்.
மேலும், ஜோஷ்வாடிரம்ப்பின் பெற்றோர்கள் மேகன் டிரம்ப் மற்றும் பாபி பெர்டோ தொலைக்காட்சிசேனலுக்கு அளித்த பேட்டியில், பள்ளியில் தனது மகனை கொடுமைப்படுத்தும் நிகழ்வு2015-ல் டிரம்ப் அதிபர் தேர்தலில் நிற்கப்போவதாக அறிவித்ததில் இருந்து தொடங்கியதுஎன்று கூறியுள்ளனர்.
தொடர்ந்து அந்த சிறுவன்கடும் கேலி கிண்டலுக்கு உள்ளானதால் பெற்றோர்கள் ஜோசப் டிரம்ப்-யை பள்ளியில்இருந்து நிறுத்தியிருக்கிறார்கள். அதன் பின்னர் ஒரு வருடம் வீட்டிலேயே அவர்படித்து வந்தார். பின்னர் நடுநிலை பள்ளியில் இணைந்தார்.
புதிய பள்ளியிலாவதுதனது மகனுக்கு கேலி தாக்குதல்கள் நடக்காது என நம்பி அனுப்பி உள்ளனர். ஆனால் பெயரால்ஏற்பட்டுள்ள கிண்டலும் கேலியும் தொடர்வதாக அந்த சிறுவன் வருத்தம்தெரிவித்துள்ளான்.