முகம் சுருக்கங்களுடன் காணப்படுகின்றதா? எளிய டிப்ஸ்

பொதுவாக சில பெண்களுக்கு இளம்வயதிலேயே முகத்தில் சுருக்கங்கள் வந்து வயதானவரை போன்று முகம் மாற்றம் பெறுகின்றது.

இதற்காக வழமை போல் கடைகளில் கிடைக்கும் கண்ட கண்ட கிறீம்களையும் மருந்து பொருட்களையும் வாங்கி பாவிப்பதுண்டு.

இதனால் தற்காலிமான அழகினை மட்டும் தான் பெற முடியும். இதற்கு நாம் வீட்டில் இருக்கும் சில பொருட்களை கொண்டு இதனை சரி செய்ய முடியும். தற்போது அது என்ன என்பதை பார்ப்போம்.

தேவையானவை
  • வெள்ளரிக்காய் ஜுஸ் 2 ஸ்பூன்
  • ரோஸ் நீர் 1 ஸ்பூன்
  • பிளம்ஸ் 2
செய்முறை

முதலில் பிளம்ஸை நன்கு அரைத்து கொள்ளவும்.

பிறகு அதனுடன் ரோஸ் நீர் அல்லது வெள்ளரிக்காய் சாற்றை கலந்து கொள்ளவும்.

பிறகு இதனை முகத்தில் பூசி மசாஜ் செய்து, 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும்.

இதனால் சுருக்கங்கள் மறைந்து முகம் இளமை தோற்றம் பெரும்.