பிரசன்னா தற்கொலை?! இணையத்தில் வெளியாகும் அதிர்ச்சி தகவல்!!

மருத்துவத்திற்காக நீட் நுழைவு தேர்வு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, பல்வேறு அரசியல் கட்சிகளும், மாணவர்களும், “நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், அதனை ரத்து செய்ய கோரியும்” அதனை எதிர்த்து போராட்டம் செய்து வருகின்றனர்.

பின்னர் அரியலூர் மாவட்டம் அனிதா என்ற சிறுமி நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்டார். இதை வைத்து பல திராவிடக் கட்சிகள் அரசியல் செய்ததாக புகார்கள் வந்தன.

ஆனால், இன்று ஆச்சர்யத்தக்க நிகழ்வாக தமிழக மாணவர்கள் அதிக அளவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். அதிலும் இந்திய அளவில் தமிழக மாணவர்கள் தான் அதீத இடங்களை பிடித்துள்ளது கூடுதல் மகிழ்வை தருகிறது.

இதற்கு மத்திய அரசின் ஆதரவாளர்கள் பலர், நீட்டை எதிர்த்தவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக இணையத்தில் கலாய்த்து வருகின்றனர். குறிப்பாக திமுக பேச்சாளர் பிரசன்னா,” தமிழகத்தை சேர்ந்தவர்கள் யாரும் நீட்டில் தேர்ச்சி பெற போவதில்லை.

அவ்வாறு தேர்ச்சி பெற்றால் நான் செத்து விடுகிறேன்” என பதிலளித்துள்ளார். தற்பொழுது நீட்டில் அதிக அளவு தேர்வு பெற்றுள்ளது தமிழக மாணவர்கள் என்ற செய்தி வெளியானதில் இருந்து, பிரசன்னாவை “எப்பொழுது தற்கொலை செய்ய போகிறீர்கள்?” என தாறுமாறாக கலாய்த்து வருகின்றனர்.

இது திமுகவை சேர்ந்த பலருக்கும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.