ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கிறேன்!! நித்தியானந்தா போட்ட வெடிகுண்டால்., அதிர்ச்சியில் பக்தர்கள்!!

சில நாட்களாக நித்தியானந்த எங்கிருக்கிறார் என பலருக்கும் தெரியாமல், அவரது பக்தர்கள் அனைவரும் கவலையில் ஆழ்ந்திருப்பதாக பல்வேறு தகவல்கள் தற்பொழுது வெளிவருகின்ற்ன.

பக்தர்களின் கவலைக்கு பல இடங்களில் இருந்தும் வீடியோ மூலம் பதில் சொல்லும் நித்தியானந்தா இதை தான் சொல்கிறாராம். ” நான் தூணிலும் இருப்பேன் துரும்பிலும் இருப்பேன். எப்பொழுதும் உங்களுடன் தான் இருக்கின்றேன்.

எனது உடல் எங்கிருகிறது என்று தேடாதீர்கள். பரம்பொருளான உயிரை நினையுங்கள் உங்களுடன் தான் இருக்கின்றேன். என் உடலை தேடாதீர்கள் அது நிரந்தரமற்றது. என் உயிர் பறந்து கொண்டிருக்கிறது” என பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார்.

எப்பொழுதும் பெண் பக்தர்கள் புடைசூழ வலம் வரும் நிதியை சில நாட்களாக காணவில்லை. ஆனால், தினமும் ஆன்லைனில் ஆசிர்வாதம் வழங்கி வருகிறார்.

அவர் எங்கே இருக்கிறார் என கேட்கும் பலருக்கும் அசிரமவாசிகள் அவர் இமயத்தில் தவம் புரிகிறார் என பதில் கூறுவதாக தெரிகிறது. அவர் வேறொரு இடத்தில் தலைமறைவாக உள்ளதாக சிலர் தகவல்கள் வெளியிடுகின்றனர்.

இதை எப்படி நம்புவது என கேட்டால், ” ஃபேஸ்புக்கிலும், யு-டியூபில் வரும் நித்தியானந்தாவின் லைவ் நிகழ்ச்சிகள் எங்கிருந்து இணையதளத்தில் ஏற்றப்படுகிறது என கண்டுபிடிக்கும் கணினி வல்லுநர்கள் நித்தியின் பக்தர்களாகவே இருக்கிறார்கள்” என்கின்றனர்.