அரசியல்வாதியாகிறாரா விஜய்சேதுபதி?

தமிழில் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடித்து வெளிவந்த படம் 96. இப்படத்தை நந்தகோபால் தயாரித்துள்ளார். மேலும் கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். காதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

இந்நிலையில் வெற்றிகரமாக 100 நாட்கள் ஓடிய 96 படத்திற்கான நூறாவது நாள் கொண்டாட்ட விழா நேற்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் விழாவில் பேசிய விஜய் சேதுபதி தனது அடுத்த படம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
தற்போது மாமனிதன் படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதி அடுத்ததாக துக்ளக் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை7 ஸ்கிரீன் ஸ்டுடியோநிறுவனம் தயாரிக்க உள்ளது.

மேலும் துக்ளக் படத்தை புதுமுக இயக்குனர் பிரசாத் இயக்குகிறார். சீதக்காதி இயக்குனர் பாலாஜி தரணிதரன் இப்படத்திற்கு வசனம் எழுதுகிறார்.

துக்ளக் திரைப்படம் முழுவதும் அரசியல் சார்ந்த படம். இப்படத்தில் விஜய் சேதுபதியை அரசியல்வாதியாக பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.