மதுரை கே.சத்திரப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் பரமேஸ்வரன். இவரது மனைவி மாரியம்மாள்.இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று காலை வயலுக்கு சென்ற மாரியம்மாள் வெகுநேரமாகியும் வீடு திரும்பாமல் இருந்துள்ளார்.
இதனால் பதறிப்போன அவறது குடும்பத்தினர் வயலுக்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு அவர் இல்லாததால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அப்பகுதி முழுவதும் தேடி பார்த்தபோது அங்குள்ள காட்டுப்பகுதியில் இடது கண் தோண்டப்பட்டு, முகத்தில் ரத்தம் உறைந்த நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு மாரியம்மாள் கிடந்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து போலீசாருக்கு தகவலளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாரியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனை தொடர்ந்து அந்த கொலை குறித்து அப்பகுதி மக்கள் அனைவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.