தமிழகத்தில் ஆன்லைன் பொருட்களை கொடுக்க சென்ற போது, பெண்ணுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞர் கடத்தில் கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சோழிங்கா நல்லூரில் இருக்கும் பெருங்குடி, திருவள்ளூர் நகரை சேர்ந்தவர் ஹரி. இவர் தனியார் ஆன்லைன் பொருட்கள் விற்பனை நிறுவனத்தில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களை கொடுக்க சென்ற போது, சென்னை டி.நகரை சேர்ந்த திருமணமான பெண்ணின் அறிமுகம் கிடைத்துள்ளது.
அடிக்கடி அவரது வீட்டுக்கு பொருட்கள் கொடுக்க சென்றதால் ஹரிக்கும், அந்த பெண்ணும் நண்பர்களாக பழகியுள்ளனர்.
முதலில் நண்பர்களாக பழகிய இவர்கள் நாளைடைவில் மிகவும் நெருங்கி பழகும் அளவிற்கு இருந்து வந்துள்ளனர். வீட்டுக்கு பொருட்கள் கொடுக்க வருவது போல் ஹரி அந்த பெண்ணுடன் பல முறை உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் பெண்ணின் கணவருக்கு தெரியவந்ததால், அதிர்ச்சியடைந்த அவர், ஹரி மற்றும் மனைவியை கண்டித்துள்ளார்.
அதன் பின் திடீரென்று ஹரியை ஆட்டோவில் கடத்திச் சென்ற மர்மகும்பல், செங்கல் பட்டு பழவேலி அருகே சென்ற போது, அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதனால் பலத்த காயமடைந்த ஹரி அவர்களிடமிருந்து எப்படியோ தப்பி வந்த போது, அங்கிருந்த ரோந்து பொலீசார் ஹரியை பார்த்துள்ளனர்.
அதன் பின் பொலிசார் அது குறித்து விசாரித்த போது, அந்த கும்பலில் ஒருவனை கைது செய்த பொலிசார், தப்பி ஓடிய நான்கு பேரையும் தேடி வருகின்றனர்.
பலத்த காயம் அடைந்த ஹரி சிகிச்சைக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.