யாழ்.கோண்டாவில் பகுதியில் இந்த மாதம் முதலாம் திகதி வீதியைக் கடக்க முற்பட்ட போது மோட்டார்ச் சைக்கிள் மோதிப் படுகாயமடைந்த குடும்பப் பெண் ஐந்து நாட்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தற்போது கோண்டாவில் பகுதியில் வசித்து வரும் குறித்த பெண் வீதியைக் கடக்க முற்பட்ட போது மோட்டார்ச் சைக்கிளுடன் மோதுண்டு தலையில் படுகாயமடைந்தார். இந்நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி ஐந்து நாட்களின் பின்னர் மரணமானார்.
இதேவேளை,யாழ்.புன்னாலைக்கட்டுவன் தெற்குப் பகுதியை சொந்தவிடமாக கொண்ட சின்னத்தம்பி தங்கரத்தினம்(வயது-67)என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.